Monday, December 15, 2025

ஓவ்வொருவருக்குள்ளும் ஏதோ ஒரு கெட்டித்தனம் இருக்கத்தான் செய்யும்.



 வான்குருவியின் கூடு வல்லரக்குத் தொல்கரையான்

தேன்சிலம்பி யாவருக்கும் செய்யரிதால் - யான்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது



வான்குருவியின் கூடு 



வல்லரக்கு


தொல்கரையான்



தேன்



சிலம்பி



தூக்கணாங் குருவியின் கூடும், உறுதியான அரக்கும், பழமை கொண்ட கரையான் புற்றும், தேன்கூடும், சிலந்தியின் வலையும் நம்மில் யாவருக்கும் செய்வதற்கு அரிதானவையாகும். அதனால் யாம் பெரிதும் வல்லமை உடையோம் என்று எவரும் தற்பெருமை பேசுதல் வேண்டாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று எளிதானது என்று அறிவீர்களாக” என்பது பொருள்.



தூக்கணாங் குருவிக்கூடு மரத்தில் தொங்கும்போது பார்த்திருப்பீர்கள்.
மரக்கொம்பில் அரக்குப் பூச்சிகள் கொம்பரக்கு என்னும் மெழுகு செய்து
வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். காட்டு வெளியில் கறையான் எடுத்த
பழைய புற்று எழுந்து நிற்பதைப் பார்த்திருப்பீர்கள். தேனீக்கள்
கட்டிவைத்த அறுகோண அறைகள் கொண்ட தேன் மெழுகுக் கூட்டைப்
பார்த்திருப்பீர்கள். சிலந்தி பின்னிய சிக்கலான வலையையும்
பார்த்திருப்பீர்கள். இவற்றுள் ஒன்றைக்கூட யாராகினும் ஒருவர்
செய்துகாட்ட முடியுமா? எதையும் செய்து முடிக்கக்கூடிய ஆற்றல் பெற்றவன்
நான் என்று எடுத்ததற்கெல்லாம் வீரம் பேசாதீர்கள். ஓவ்வொருவருக்குள்ளும்
ஏதோ ஒரு கெட்டித்தனம் இருக்கத்தான் செய்யும்.

No comments:

Post a Comment