Monday, January 21, 2019

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க ! what are those 16 blessings?


அம்மா அபிராமி ! பதினாறு  இக சுகம் அருள்வாயே !



கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்கபடு வாராத நட்பும் கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணியிலாத உடலும் சலியாத மனமும் அன்பகலாத மனைவியும் தவறாத சந்தானமும் தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும் தொலையாத நிதியமும் கோணாத கோலு மொருதுன்பமில்லாத வாழ்வும் துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரியதொண்டரொடு கூட்டு கண்டாய் அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையேஆதிகடவூரின் வாழ்வே!அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி! அபிராமியே! 

_அபிராமி பட்டர்

பொருள்
பாற்கடலில் உணர்நிலை உறக்கம் கொள்ளும் திருமாலின் தங்கையாய் ஆதி கடவூரில் திருக் கோவில் கொண்டு, வாழ்வின் அமுதமாய், தொண்டருக்கெல்லாம் தொண்டராய் விளங்கும் ஈசனின் ஒரு பாதி மேனி கொண்ட அபிராமித் தாயே!

அபிராம பட்டர் இந்த பதினாறு பேறுகள் கிடைக்க அன்னை அபிராமியிடம் வேண்டிக்கொள்கிறார்.

1) என்றும் நீங்காத கல்வி, 
2) நீண்ட ஆயுள்,
3) கள்ளம் இல்லாத நட்பு, 
4) என்றும் குறையாச் செல்வம்,
5) எப்போதும் இளமை, 
6) பிணி இல்லாத ஆரோக்கியமான உடல்,
7) முயற்சிகளைக் கைவிடாத மனோபலம், (சலிப்பு வராத மனம்), 
8) அன்பு நீங்காத மனைவி, 
9) புத்திர பாக்கியம்,
10) குறையாத புகழ்,
11) சொன்ன சொல் தவறாமல் இருப்பதற்கான குணம், 
12) எந்தத் தடையும் ஏற்படாத கொடை
13) என்றும் குன்றாச் செல்வச் செழிப்பு, 
14)செங்கோல் வளையாமல் பரிபாலிக்கும் அரசன்,
15) துன்பமில்லாத வாழ்வு, 
16) உன் பாதத்தின்மேல் பக்தி, 
இவையனைத்தும் என்றென்றும் நீ அருள்வாய் தாயே !