Tuesday, October 13, 2026

மகாமந்திரம் - அருட்பெருஞ்ஜோதி - An explanation

                                                            குருவே துணை!! 

                                         திருஅருட்பிரகாச வள்ளலார் திவ்ய திருவடிகளே சரணம்  


மகாமந்திரம்

========

 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை 

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி  



பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம் 

அது ஒப்பற்ற பெருந்தயவுடைய பேர் அறிவேயாம் 


ஓங்காரம் 

==========

அ - படைத்தல்  

உ - காத்தல் 

ம - துரிசு நீக்குதல் 


ஐந்து  தொழில்கள் 

============= 

அ - படைத்தல்  

உ - காத்தல் 

ம - துரிசு நீக்குதல் 

பக்குவம் வரவைத்தல் 

அனுகிரஹித்தல் 


உட்பொருள் 

=========

The binding force (ஆண்ட பிண்டம் )

ம -இணைப்பு அணுக்கள்

அ - சிரசு  அணுக்கள் 

உ-தேகம் அணுக்கள் 


32 எழுந்துக்கள் - 32 individual vertebrae in Spinal Cord

பேதம் அற்ற நிலையில் (அன்பு ,கருணை ,தயவு ) ஒருமை வெளிப்படும் 


Wednesday, September 30, 2026

திருவிருத்தம்

 பொன்னிசூழ் அரங்கமேய பூவைவண்ண மாய கேள்!

என்னதாவி என்னும் வல்வினையினுள் கொழுந்தெழுந்து,
உன்னபாதம் என்னநின்ற ஒண்சுடர்க் கொழுமலர்,
மன்னவந்து பூண்டு வாட்டமின்றி எங்கும் நின்றதே.



எளிய விளக்கம்
காவிரி நதி (பொன்னி) சூழ்ந்த ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருக்கும், காயாம்பூ போன்ற நீல நிறத்தைக் கொண்ட மாயவனே! என்னுடைய உயிர் எனப்படும் வலிய வினையின் உள்ளே ஒரு கொழுந்து எழுந்தது. அது உன்னுடைய திருவடிகள் என்று சொல்லும்படி நின்ற, ஒளிர்கின்ற சுடரையுடைய செழுமையான தாமரை மலராக மாறியது. அந்த மலர் என் நெஞ்சில் நிலைபெற்றுப் பொருந்தி, எவ்வித வாட்டமும் (வருத்தமும்) இல்லாமல் எங்கும் பிரகாசித்துக் கொண்டு நிற்கிறது.
அதாவது, ஆழ்வார் தன் நெஞ்சில் எம்பெருமானின் திருவடிகள் வந்து குடியேறியதால், தனக்கு இருந்த பாவங்கள் எல்லாம் நீங்கி, தன் உயிர் வாட்டமின்றிப் பேரின்பத்தில் திளைப்பதாக இந்தத் தத்துவத்தை விளக்குகிறார்.

திருச்சந்தவிருத்தம் -திருமழிசையாழ்வார்

ஆத¦ ஆத¦ ஆத¦ நீ ⋆
ஒர் அண்டம் ஆத¦ ஆதலால் ⋆


சோதியாத சோதி  நீ ⋆
அதுண்மையில்   விளங்கினாய்
வேதம் ஆகி  வேள்வி  ஆகி 
விண்ணிணிேனாடு மண்ணும் ஆய் ⋆
ஆதி ஆதி ஆயன் ஆய 
மாயம் என்ன மாயேம!



முக்கிய அற்புத நிகழ்வு (சொன்னவண்ணம் செய்த பெருமாள்)
காஞ்சிபுரம் திருவெஃகா திருத்தலத்தில் ஆழ்வார் தங்கியிருந்தபோது, அவரது சீடரான கணிகண்ணனை அந்நாட்டு மன்னன் ஊரை விட்டு வெளியேற உத்தரவிட்டான். சீடனின் பின்னே ஆழ்வாரும் செல்ல முடிவெடுத்தார். 
அப்போது அக்கோயில் பெருமாளிடம், "கணிகண்ணன் போகின்றான், நானும் அவனுடன் போகிறேன், நீயும் உன்னுடைய பாம்புப் படுக்கையைச் சுருட்டிக்கொண்டு எங்களோடு புறப்படு" என்று பாடினார். பெருமாளும் பக்தனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டுத் தனது படுக்கையைச் சுருட்டிக் கொண்டு அவர்கள் பின்னே சென்றார். இதனால் ஊரே இருண்டது. தவறை உணர்ந்த மன்னன் மன்னிப்புக் கேட்க, மீண்டும் ஆழ்வாரின் வேண்டுதலின்படி பெருமாள் அங்கே வந்து சயனித்தார். பக்தன் சொன்னவண்ணம் செய்ததால் இத்தல பெருமாளுக்கு 'சொன்னவண்ணம் செய்த பெருமாள்' (யதோக்தகாரி பெருமாள்) என்ற திருநாமம் ஏற்பட்டது



Friday, August 28, 2026

Gratefull...im gratefull..im gratefull..

im gratefull..im gratefull..

 Gratefull for the sun

 Gratefull for the rain

 Gratefull for the roof that keeps from the 

 Gratefull for the bread 

 Gratefull for the Wine 

 Gratefull for this Heart that's still beating fast..

im gratefull..im gratefull..

im gratefull for every little thing

Tuesday, August 18, 2026

வாரணம் ஆயிரம் - மணம் முடிக்க மணமகனாக‌ பெருமாள் வந்த நிலை

 




 கதிர்-ஒளித் தீபம் கலசம் உடன் ஏந்திச்

சதிர்இள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள

மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும்

அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்            


கதிரவனைப் போல ஒளியுடைய தீபங்களையும், கலசங்களையும் ஏந்தி அழகிய இளம் பெண்கள் வரவேற்கும் போது வடமதுரை மன்னான கண்ணன் மணப்பந்தலின் நிலைப்படியினைத் தொட்டு வாத்தியங்கள் முழங்க உள்ள புகுந்து வர நான் கனவு கண்டேன் தோழீ


Friday, August 14, 2026

வாரணம் ஆயிரம் - காப்பு கட்டுதல்



 நால்-திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனிநல்கி

பார்ப்பன சிட்டர்கள் பல்லார் எடுத்துஏத்தி

பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்தன்னைக்

காப்பு-நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்

நான்கு திசைகளிலிருந்தும் புனிதநீரினைக் கொண்டுவந்து அந்தணர்களில் சிறந்தோர் பலபேர்கள் மந்திரங்களால் ஓதி அப்புனிதநீரினைத் தெளித்து தாமரை மலர்களை அணிந்துள்ள புனிதமான கண்ணனுக்கும் எனக்கும் கையில் காப்புக் கயிறு கட்ட நான் கனவு கண்டேன் தோழீ

வாரணம் ஆயிரம் - பெரியோர்களின் அனுமதி







இந்திரன் உள்ளிட்ட தேவர்-குழாம் எல்லாம்
வந்திருந்த என்னை மகட் பேசி மந்திரித்து
மந்திரக்கோடி உடுத்தி மணமாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்

தேவர்களின் தலைவனான இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் எல்லாம் வருகை புரிந்து என்னை மணப்பெண்ணாய் மணம் பேசி மந்திரங்கள் சொல்லி எனக்கு புதிய ஆடைகளைக் கொடுத்து அவற்றை அணிந்து வந்தபின் மைத்துனியாகிய பார்வதி தேவி எனக்கு மணமாலையை அணிவிக்க நான் கனவு கண்டேன் தோழீ