Tuesday, August 18, 2026

வாரணம் ஆயிரம் - மணம் முடிக்க மணமகனாக‌ பெருமாள் வந்த நிலை

 




 கதிர்-ஒளித் தீபம் கலசம் உடன் ஏந்திச்

சதிர்இள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள

மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும்

அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்            


கதிரவனைப் போல ஒளியுடைய தீபங்களையும், கலசங்களையும் ஏந்தி அழகிய இளம் பெண்கள் வரவேற்கும் போது வடமதுரை மன்னான கண்ணன் மணப்பந்தலின் நிலைப்படியினைத் தொட்டு வாத்தியங்கள் முழங்க உள்ள புகுந்து வர நான் கனவு கண்டேன் தோழீ


No comments:

Post a Comment