Wednesday, April 1, 2026

மெய்த்துணையே Reaching Divine Day 11

 

  • 3. பற்றயர்ந் தஞ்சிய பரிவுகண் டணைந்தெனைச்
    சற்றுமஞ் சேலெனத் தாங்கிய துணையே
  • 584. தளர்ந்தவத் தருணமென் றளர்வெலாந் தவிர்த்துட்
    கிளர்ந்திட வெனக்குக் கிடைத்தமெய்த் துணையே
  • 585. துறையிது வழியிது துணிவிது நீசெயும்
    முறையிது வெனவே மொழிந்தமெய்த் துணையே
  • 586. எங்குறு தீமையு மெனைத்தொட ராவகை
    கங்குலும் பகலுமெய்க் காவல்செய் துணையே
  • 587. வேண்டிய வேண்டிய விருப்பெலா மெனக்கே
    யீண்டிருந் தருள்புரி யென்னுயிர்த் துணையே
  • 588. இகத்தினும் பரத்தினு மெனக்கிடர் சாரா
    தகத்தினும் புறத்தினு மமர்ந்தமெய்த் துணையே