Tuesday, November 4, 2025

Day 2 : Reaching Divine

 Dear கடவுள்,

இதுவும் கடந்து போகும் ...

Let it go...for what is temporary will go ...

Let it go...for what is not understandable will go...

Let it go...for what is not trustworthy will go...

Let it go...for what cannot be proven will go...


நரைமரண மூப்பறியா நல்லஉடம் பினரே

நற்குலத்தார் எனஅறியீர் நானிலத்தீர் நீவிர்
வரையில்உயர் குலம்என்றும் தாழ்ந்தகுலம் என்றும்
வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்காண் கின்றீர்
புரையுறுநும் குலங்கள்எலாம் புழுக்குலம்என் றறிந்தே
புத்தமுதம் உண்டோங்கும் புனிதகுலம் பெறவே
உரைபெறும்என் தனித்தந்தை வருகின்ற தருணம்
உற்றதிவண் உற்றிடுவீர் உண்மைஉரைத் தேனே.


let it come.. புனிதகுலம் பண்புகள் 



நிராசை
சாந்தம் 
நெறிபெறும் உதாரகுணம் 
மருள் நீக்கும் அறிவு 
நிராங்காரம் 
சுத்தமுறு மனம் 

 

Day 1: Reaching Divine

புனித குலம் பெறுமாறு புகலல்

 காடுவெட்டி நிலந்திருத்திக் காட்டெருவும் போட்டுக்

கரும்பைவிட்டுக் கடுவிரைத்துக் களிக்கின்ற உலகீர்
கூடுவிட்டுப் போயினபின் எதுபுரிவீர் எங்கே
குடியிருப்பீர் ஐயோநீர் குறித்தறியீர் இங்கே
பாடுபட்டீர் பயன்அறியீர் பாழ்க்கிறைத்துக் கழித்தீர்
பட்டதெலாம் போதும்இது பரமர்வரு தருணம்
ஈடுகட்டி வருவீரேல் இன்பம்மிகப் பெறுவீர்
எண்மைஉரைத் தேன்அலன்நான் உண்மையுரைத் தேனே




 



Friday, October 10, 2025

 

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும். 605
கெடுநீரார் காமக் கலன். 


சோம்பல், எதையும் தாமதமாகவே செய்தல், மறதி, தூக்கம் என்னும் நான்கும், தாம் அழிந்துவிடக் கருதும் தன்மை கொண்டவர்கள், விரும்பி ஏறும் கப்பல்களாம்







For Parthiban, (chella Kutty. poi padi. pleasse)
by Loving Mom - 07/10/2025