Wednesday, November 15, 2017

கல்லாலின் புடையமர்ந்து - திருவிளையாடற் புராணம்

.

கல்லாலின் புடையமர்ந்து நான்மறை 
    ஆறங்கம் முதல்கற்ற கேள்வி 
வல்லார்கள் நால்வர்க்கும் வாகிறந்த 
   பூரணமாய் மறைக்கு அப்பாலாய் 
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை 
   இந்தபடி இருந்து , காட்டிச் 
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் 
   நினைந்துபவத் தொடக்கை வெல்வாம் 
விளக்கம்
கல்லால மரத்தின் (ஆலமரம்) கீழ் இருந்து, நான்மறை, ஆறுஅங்கம் முதலானவற்றை கற்றுணர்ந்த கேட்டலில் வல்லுநர்கள் ஆகிய சநகர் முதலிய நான்குமுனிவர்கட்கும், வாக்கியலைக் கடந்த நிறைவாயும், வேதங்கட்கு அப்பாற்பட்டதாயும், எல்லாமாயும் அவற்றுள் ஒன்றும் அல்லதுமாயும் உள்ளதன் உண்மையை உள்ளபடி இருந்து காண்பித்து குறிப்பாலுணர்த்திய தட்சிணாமூர்த்தியை இடையறாமல் நினைந்து பிறவிக் கட்டாகிய பகையை வெல்வாம்

Transliteration in English

 Sitting below the tree in a Stone, to the four who were well versed in four Vedas and six auxiliary sciences of Vedas, the silent complete one who is beyond the Vedas and who is as everything but beyond everything , Showed the truth “how it is” and “as it is” “and by being that” , the one who told without speaking We shall think him without thoughts(by meditation) and win over our Sins.


விரிவுரை

கல்லாலின் புடையமர்ந்து நான்மறை  ஆறங்கம் முதல்

[ ஆல மரத்தின் கீழ் கல்லின் மேல் அமர்ந்து  , நான்கு மறை (வேதங்கள் ), ஆறு அங்கம் முதலாக   ]

இங்கு நான்கு மறை ஆவண அறம் ,பொருள் ,இன்பம் ,வீடு  . திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் இந்த நான்கு பிரிவுகளை காணலாம்  . நம்முடைய சைவ சித்தாந்தம் இதை தான் நான்கு வேதமாக கொள்கிறது . அனால் வடமொழியிலோ ரிக் ,சம,யஜுர் ,அதர்வணவேதங்களை  நான்காக கொண்டுள்ளார்கள்

ஆறங்கம் முதல் - என்பது  உடம்பில் உள்ள குண்டலினி சக்தியை ஆறு சக்கரங்களை தாண்டி தலைக்கு எழுப்புவது கூறப்பட்டுள்ளது .

These 6 chakras in the body and are the paths that lead to Shiva. Once these chakras are activated, we can take the consciousness to head (7th chakra). In head there is a thousand petaled lotus, which when activated man become super conscious and can realise God(தத்வம் /சிவம் ).



கற்ற கேள்வி வல்லார்கள் நால்வர்க்கும் வாகிறந்த பூரணமாய்

[கற்றுணர்ந்த, கேள்வி வல்லார்கள் நால்வருக்கும் வாக்கு இறந்த பூரணமாய் ]

கற்றுணர்ந்த, கேள்வி வல்லார்கள் நால்வருக்கும் (1.சனகர், 2.சனந்தனர், 3.சனாதனர், 4.சன்ற்குமாரர்) .

வாக்கு இறந்த பூரணமாய்  - இங்கு வாக்கியலைக் கடந்த நிறைவாயும் என்பது , இறைவன் பேசாமல் பேசுவான் என உணர வேண்டும் . It means God speaks to us in Silence without any words.

 மறைக்கு அப்பாலாய் 

[ வேதங்கட்கு அப்பாற்பட்ட தாயும் ]

He is beyond the vedas.

எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இந்தபடி இருந்து , காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்  நினைந்து
பவத் தொடக்கை வெல்வாம்
[
 எல்லாமாயும், அல்லதுமாய்
இந்த உண்மையை சொல்லாமல் சொன்னவரை நினையாமல்  நினைந்து. 
பல பிறவிகளாக தொடருந்து வரும் பாவத்தினை (கர்மத்தினை) வெல்ல முடியும் .
 ]

இறைவன் பரம்பொருளாக எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்துள்ளார் . இருப்பினும் அவர் புலன்களுக்கு அப்பார்பட்டவர். அவர் கண்களுக்கு தெரியாதவர் . இந்த உண்மையை உணர்த்தும் படியாக ...சொல்லாமல் சொன்னவரை நினையாமல்  நினைந்து.

  God is in everything yet he is beyond everything. We cannot see him.This truth is untold and can be realised only through meditation.  God can be comprehended only in thoughtless and speechless state.




2 comments:

  1. விளக்கத்துடன் பதிவு செய்த உங்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் நன்றி

    ReplyDelete