Tuesday, March 17, 2026

Reaching Divine Day 7


என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.


அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும் அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்

                                                                         ஔவிய மாதியோ ராறுந் தவிர்த்தபேர்                                                        
                                                                        அவ்வியல் வழுத்து மருட்பெருஞ் ஜோதி                                                      


ஒளவிய மாதியோ ராறுந் தவிர்த்தபேர்
அவ்வியல் வழுத்து மருட்பெருஞ் ஜோதி – 26

ஒளவியம் முதற்கொண்டு மற்ற ஆறு குணங்களையும் தவிர்க்க வேண்டும்.

ஒளவியம்: ஒளவியம் என்றால் பொறாமை. என்னால் முடியாததை அவன் செய்துவிட்டானே! என்கின்ற ஏக்கமானது நம்மை தீயவழியில் செல்ல வற்புறுத்தும். காரிய சித்தி பெற்றவனை எண்ணும்போதெல்லாம், அவன் மீது நமது எண்ணம் தாக்குதல் நடத்தும். அந்த எண்ணமே நம்மை அவனுக்கு எதிராக தீய வழியில் செல்ல வழிவகுக்கும். எனவே ஒருவரை பார்த்து பொறாமை அடைதலை தவிர்க்க வேண்டும்.
பற்று, வஞ்சகம், ஈயாமை, பேராசை, மதியாமை, சகியாமை இவைகளே கீழ்த்தரமான ஆறு குணங்கள் ஆகும். இவைகளை முறையே 
  •  காமம், 
    • செல்வம், பொருள், தாய், தந்தை, மனைவி, கணவன், மகன், மகள், சகோதரன், சகோதரி இவர்களின் பால் அதீத பற்று வைத்து அதன் மயமாய் ஆவது காமம் எனப்படும். இப்படிப்பட்ட காமமும் நமக்கு தீமையே தரும். எனவே இவற்றின்பால் அவா மயமாய் இருக்கலாம். சன்மார்க்கத்தில் அவாவும் கூடாது.
  • குரோதம், 
    • ஒருவருக்கு கெடுதி விளைவிக்க எண்ணம் கொள்வது குரோதம் ஆகும். கெடுவான் கேடு நினைப்பான் எனவே நாம் ஒருவருக்கு கெடுதி செய்தால், அக்கெடுதியால் பாதிக்கப்படுவது நாம்தான். எனவே குரோதம் தவிர்க்கப்படவேண்டும்.
  • லோபம், 
    • தனது சம்பாத்தியத்திலிருந்து ஞானிகளுக்கு கூட சிறிதேனும் கொடுக்கக்கூடாது என்னும் எண்ணம் கொள்ளுதல் லோபம் எனப்படும். பொருள் சேர்க்க வேண்டும் என்கின்ற அதீத எண்ணம் இருப்பவனால் பிறருக்கு தருமம் தானம் செய்ய இயலாது. அப்பொருளால் பிறருக்கும் பயனில்லை, அவனுக்கும் பயனில்லாது போய்விடும். எனவே லோபம் கூடாது. ‘எட்டி பழுத்தென்ன? ஈயாதான் வாழ்ந்தென்ன?
  • மோகம், 
    • தனக்கு இருக்கும் பொருள் போதாதென்று இன்னும் கொஞ்சம் அதிகமாய் சம்பாதிக்க வேண்டும் என்னும் எண்ணம் கொண்டு செயல்படுதல் மோகம் எனப்படும். பார்க்கும் பொருள்களை எல்லாம் தன்வசப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற மோகத்தால் விளைவது தீய செயல்களே. அதனால் மோகத்திலிருந்து விடுபடவேண்டும்.
  • மதம், 
    • பணம் பொருள் ஆகியவைகளை அதிகம் சேர்த்துக்கொண்டு, அதனால் வருகின்ற அகங்காரத்தால் மற்றவர்களை அலட்சியப்படுத்தி பேசும் குணத்தை மதம் என்கிறோம். பிறரை மதியாமல் மதம் கொண்டு நடந்தால் அழிவு அவனை தேடி வருகின்றது எனப்பொருள். எனவே மதத்தை தவிர்க்க வேண்டும்.
  • மாச்சர்யம்

No comments:

Post a Comment