Wednesday, July 8, 2026

Reaching Divine Day 14 - கையில் பொருள் இருக்கும்போதே அறம் செய்ய வேண்டும். (நாலடியார் )

                        நாலடியார்



மற்றறிவாம் நல்வினை யாமிளையம் என்னாது
கைத்துண்டாம் போழ்தே கரவா தறஞ்செய்ம்மின்
முற்றி இருந்த கனியொழியத் தீவளியால்
நற்காய் உதிர்தலும் உண்டு!        19






பின்னர் பார்த்துக்கொள்ளலாம்.
இப்போது நான் இளையவனாக இருக்கிறேன்
என்று எண்ணாமல்
அறம் செய்ய வேண்டும்.


கையில் பொருள் இருக்கும்போதே
அறம் செய்ய வேண்டும்.


புயல் காற்று அடிக்கும்போது
முற்றிய பழங்கள் உதிரும்போது
காய்களும் உதிர்வது உண்டு.


அதுபோல் இளமையிலும் இறப்பு நேரலாம்.


                அறன் வலியுறுத்தல்

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.


இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.

No comments:

Post a Comment